மயிலம்மா : போராட்டமே வாழ்கை

தமிழில் : சுகுமாரன்

பிளாச்சிமடை கோக்கோ கோலா நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் வரலாறு.

வெகுளியான ஆதிவாசி மனம் தனது அனுபவங்களை தனது எளிய மொழியில் சொல்லுகிறது. ஒரு வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து மக்கள் போராட்டத்தின் பதிவேடு ஆகிறது இது.

₹ 80.00

Out of stock

மயிலம்மா ஒரு ஆதிவாசிப் பெண்மணி. கைம்பெண்ணான நிலையிலும் ‘வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காணவே’ விரும்பியவர். பொதுப் பிரச்சனைக்காக முன்னணியில் நின்று போராடக் கூடுமென்று அவர் எதிர்பார்த்ததுமல்ல. ஆனால் காலமும் சூழலும் அவரை பிளாச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக்கியிருக்கிறது.ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த கோக்கோகோலா எதிர்ப்புப் போராட்டத்தில் அயராமல் ஈடுபட்டார். ஓர் ஆதிவாசிப் பெண்மணி உலகம் உற்றுப் பார்க்கும் போராட்ட நாயகியானதன் பின்னணிக் கதை இந்த நூல்.
வெகுளியான ஆதிவாசி மனம் தனது அனுபவங்களை தனது எளிய மொழியில் சொல்லுகிறது. ஒரு வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து மக்கள் போராட்டத்தின் பதிவேடு ஆகிறது இது.
TOP