எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா.
ஒரு பத்துக் கதாபாத்திரங்களும் ரஷ்ய சிறப்பு முகாமின் ஒருநாள் அனுபவங்களும்தான் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் நாவலின் கதை. ஸ்டாலின் காலகட்ட அடக்குமுறை அவரது காலகட்டத்திலேயே பதிவானது, ரஷ்ய இலக்கிய வரலாற்றில் வேறந்த நாவலிலும் கிடையாது. சிறப்பு முகாமின் ஒரு நாளை விவரிப்பதன் மூலம், அங்கு நடக்கும் ஊழல்கள், சிறைவாழ்வின் பரிதாபங்கள், அடக்குமுறைகள் என அனைத்தையுமே காட்சிப்படுத்திவிடுகிறார் அலெக்ஸாண்டர் சோல்செனிட்சின்.