கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா.
ஹான்ஷானின் கவிதைகள் உங்கள் இல்லத்தில் இருக்கின்றனவா? வேதங்களை ஓதுவதைக் காட்டிலும் இவை சிறந்தவை! அவ்வப்போது உங்கள் பார்வையில் படும்படி இவற்றை எழுதித் திரையொன்றில் ஒட்டி வையுங்கள்!