பசியையும், தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள் புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல்.
நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டும் மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள்இயக்கமே உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை. நிரந்தனமானது. உடற்கட்டு பொய்த்தோற்றம், தற்காலிகமானது.