சிறுகதைகள்
Showing 21–30 of 36 results
நீளும் கனவு
கவின் மலர்
கவின்மலரின் கதைகள் புனைவுகளாக, அவர் பார்வையைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம்.
பச்சைப் பறவை
கௌதம சித்தார்த்தன்
அவள் கைகளில் குத்திருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி. நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில்
பிலோமி டீச்சர்
வா. மு. கோமு
காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல்.
புலிப்பானி ஜோதிடர்
காலபைரவன்
மன இயக்கத்தின் சிக்கலான திசைகளைச் சித்தரிக்கும் முயற்சிகளாக காலபைரவனின் சிறுகதைகளைச் சொல்லவேண்டும். அதுவே அவருடைய கதைக்களம். சிக்கலின் தன்மையைச் சொல்வதற்குப் பொருத்தமாக பல தருணங்களில் இறந்தகாலமும் நிகழ்காலமும் இவருடைய படைப்புகளில்
பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்
ரோஹிணி சவுத்ரி
தமிழில் : சசிகலா பாபு
கிரேக்கம், ரோமானியம், நார்வே, செல்டிக், எகிப்து, அமெரிக்கப்பழங்குடியினம், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் புகழ்வாய்ந்த புராணங்களில் இருந்து, இருபது இதிகாசக்கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன.
மர நிறப் பட்டாம்பூச்சிகள்
கார்த்திகைப் பாண்டியன்
மறுபடியும்
கனகராஜன்
மறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்கிறது கனகராஜனின் எழுத்துகள்…
முரண்
கோமகன்
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன்.
மூன்றாவது சிருஷ்டி
கௌதம சித்தார்த்தன்
பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள்.