சிறுகதைகள்
Showing 1–10 of 41 results
அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி
அ. கரீம்
அஞ்சிறைத்தும்பி
சுகுணா திவாகர்
ஆனந்த விகடன் இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு. வெளிவந்த காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை. குறிப்பாக கால இயந்திரத்தில் பெரியாரை அழைத்துவந்து சமகாலச் சூழலில் நிகழ்த்தும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ‘ஜீன்ஸ் பெரியார்’ கதை, மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன் உரையாடல்களையும் தொடக்கிவைத்தது. புத்தர், பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், காந்தி போன்ற வரலாற்று மனிதர்களில் இருந்து …
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்
ஹஸ்தா சௌவேந்திர சேகர்
தமிழில் : லியோ ஜோசப்
நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம்.
இருண்ட காலக் கதைகள்
தொகுப்பு: அ. கரீம்
இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்குகள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான்.
இஸ்மாத் சுக்தாய் கதைகள்
இஸ்மாத் சுக்தாய்
தமிழில் : விஜயபத்மா
உருமாற்றம்
ஃப்ரான்ஸ் காஃப்கா
தமிழில் : பேரா. ச.வின்சென்ட்
நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர்.
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
வா.மு. கோமு
இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல
எருது : உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
மொழியாக்கம் : கார்த்திகைப் பாண்டியன்
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன்.
ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்
அராபிய பெண்ணியச் சிறுகதைகள்
தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்ஸி ராணி
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில்
இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகளினூடாக உருவகப்படும் நவீன அராபியப் பெண்ணின் சித்திரத்தின் வழியே அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் எண்ணப்போக்குகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.