கவிதை
Showing 11–20 of 20 results
நெடுஞசாலையைக் கடக்கும் நத்தை
ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி
எநதப்பயணத்திலும் உடன் வருவதல்லை என்வீட்டுமரம் சாலையோர மரங்களை துணைக்கு அனுப்புகிறது தன்னை நினைவூட்ட…
புறாத் தோட்டம்
பிரேம்
பிரபஞ்சத்தில் தீராக் காதலையும், கட்டற்ற அன்பையும் நிலைநிறுத்த இடைவிடாது புதியதொரு ஆயுதத்துடன் கொலை செய்து பழகவேண்டும் என்றும், எண்ணற்ற எதிர்க் கொலைகளின் வழியாக மட்டுமே அதை நிலைநிறுத்த முடியும் என்று சொல்வது வினோதமான கருத்தியலாக இருக்கலாம் ஆனால் அதனைக் கவிதையில் வாசிக்கும் போது அழகியலாகத் தோன்றுகிறதே ஏன் என்ற கேள்வி பிரேமின் ஒரு கவிதையை வாசிக்கும் பொழுது எழுந்து மற்றொரு கவிதையில் மறைந்து வேறொரு கேள்வியாக மாறித் தொடர்கிறது.
பூவுலகைக் கற்றலும் கேட்டலும்
அவுஸ்ரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்
தமிழில்: ஆழியாள்
அவர்கள் இருக்கிறார்கள் நிலவின் அழியா நிழலென கார்கால வானமாய் கறுத்திருந்த அவர்கள் கண்கள் துப்பாக்கிமுனையில் பச்சைவிழிகளாய் மாற்றிய பின்னும் இப்புவியைத் தமதாக்கும் கவிதைகள்.
பொருளற்ற சொற்கள்
ஆசிரியர்: ராஜ்குமார் ஸ்தபதி
மண் மக்கள் மொழி மானம் மயிறு எல்லாம்
இழந்து சொரனையற்று தோல் தடித்து இனாம்
இலவசத்திற்காக உங்களுக்கு முன் வரிசையில்
நிற்கையில் எழுதிய கவிதைகள்…
மஜீத் கவிதைகள்
மஜித்
முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத்தொடங்கிவிட்டன.
மரணமூறும் கனவுகள்
யாழினி
நெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினைவுகளுக்கும் புலம்பெயர் நிலத்திலும்உருவம் தரும்மொழி யாழினியுடையது, துயர்களும் பிரிவுகளும்கூட முடிவுக்கானவை அல்ல என்பதைக் கதைகளின் வழிச் சொல்லிச் செல்லும்
முள் கம்பிகளால் கூடுபின்னும் பறவை
மாலதி மைத்ரி
உடைபட்ட உடல்களின் பதுங்கிடமாக பிம்பங்களின் மின்குகைகள் மாறியபின்னும் தேவதைக் கதைகளால் நிரம்பி வழிகிறது தமிழின் இல்லமும் இல்லம்சார்ந்த இடமும். ஆண்மையக் கனவுகளுக்குள் அனைத்தும் அடங்கிவிட்டதென காமத்தின் புனிதகீதங்கள் இசைக்கப்படுகின்ற பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண்உடலை கலைத்து அடுக்கும் கவிதைகள்.
லாந்தர் தின்றது போக மிச்சம்
ஆசிரியர்: ஸ்நேகிதன்
நேரம் காட்டுகிறது கடிகாரம் ஒரு பறவை பறநது போகிறது அக்கணத்தில் வேறொன்றுமில்லை…