புதினம்
Showing 11–20 of 70 results
ஆயுத எழுத்து
சாத்திரி
கடந்த 30 வருடங்களாக இலங்கைத்தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் பார்த்த,கேட்ட,அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட முக்கியமான பல விசயங்களை,1983-ம் ஆண்டு காலப் பகுதியை தொடக்கமாக வைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்
கார்லோஸ் ஃபுயந்தஸ்
தமிழில் — ஸ்ரீதர் ரங்கராஜ்
நாவலின் தொடக்கத்தில், ஆர்டீமியோ க்ரூஸ் – ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார்.
இடபம்
பா. கண்மணி
ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச் சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு. உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து சொல்லப் பட்டிருக்கிறது.
இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள்
சல்மான் ருஷ்தீ
தமிழில் : சா. தேவதாஸ்
நம்முலகம் அறிவற்றதின் காலத்திற்குள்ளே மூழ்கியிருந்துள்ளதை விவரிக்கும், பல அடுக்குகள் மிக்கதும் வசீகரமானதாயுமுள்ள இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள் மிகச்சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவரின் சாதனைப்படைப்பாகும், கதை சொல்லலின் ஆற்றலுக்கான சான்றாவணமாகும்.
இரவு
எலி வீஸல்
தமிழில்: ரவி. தி. இளங்கோவன்
1928ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும் அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.
முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை ‘இரவு’.
ஊதாநிறச் செம்பருத்தி
சிமாமந்தா எங்கோசி அடிச்சி
தமிழில்: பிரேம்
சிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், மரபுகள், தொன்மங்கள், மொழிகள் என அனைத்திற்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தைச் சொல்லிச் செல்கிறது.
என் பெயர் பட்டேல் பை
யான் மார்ட்டெல்
தமிழில்: சின்னத்தம்பி முருகேசன்
”என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே…
ஏழரைப் பங்காளி வகையறா
எஸ். அர்ஷியா
அர்ஷியாவின் முதல் நாவலான இந்த “ஏழரைப் பங்காளி வகையறா” தமிழ் – உருது முஸ்லிம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஒரு உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை ,மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கிக் தந்திருக்கிறது.