New Releases
காஃப்கா – கடற்கரையில்
ஹருகி முரகாமி
தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஒரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை.
இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது
சிவம் சங்கர் சிங்
தமிழில்: இ.பா. சிந்தன்
பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று, அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது.
திரு & திருமதி ஜின்னா
இந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்
ஷீலா ரெட்டி
தமிழில்: தருமி
1918ம் ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. எவராலும் புரிந்து கொள்ள முடியாத தனித்துவத்தோடிருந்த ஜின்னா, பல எதிர்பார்ப்புகளோடும் காத்திருப்புகளோடும் இருந்த ருட்டி என்ற இருவரின் வாழ்க்கையை மட்டுமின்றி, அக்காலத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல் நிலைப்பாடுகளையும் பொருத்தமான பின்புலமாக வைத்து எழுதியுள்ளார்.
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
காஞ்ச அய்லய்யா
தமிழில்: அக்களூர் இரவி
‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்’
-காஞ்ச அய்லய்யா
ஜாதியற்றவளின் குரல்
ஜெயராணி
இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளும் ஜாதியை வெறுக்கும், ஜாதியற்றவளாக வாழும் எனது நிலைப்பாட்டின் பிரதிபலிப்புகள். நாம் ஒவ்வொருவரும் நம்முள் பெருமையாகவோ இழிவாகவோ சுமந்து கொண்டிருக்கும் ஜாதியைத் துறப்பதன் மூலமே அதைக் கொல்ல முடியும். ஜாதியைக் கொல்லும் அருஞ்செயலுக்கு எல்லோரையும் கூவி அழைக்கிறேன். சமத்துவத்தின் எளிய மகிழ்வைப் புறக்கணித்து சர்வாதிகாரத்தின் செருக்கை சுமந்து திரிவோர் என் பார்வையில் நோயால் பீடிக்கப்பட்டவர்கள்.
நீதி பற்றிய கோட்பாடு
அமார்த்யா சேன்
தமிழில்: க. பூரணச்சந்திரன்
சேன் நம் சகாப்தத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… பொதுஉலகிற்கான அறிவுவாழ்வினரில் ஒருவர், கலப்பற்ற தூய சிந்தனைகளின் உலகங்களையும், மிக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளின் உலகங்களையும் எளிதாகத் தாண்டிச் செல்லும் திறனால் வரையறுக்கப்படுகிறார் என்றால், சேனுக்குப் போட்டியாளர்கள் மிக அபூர்வம். – தி டைம்ஸ்
அஞ்சிறைத்தும்பி
சுகுணா திவாகர்
ஆனந்த விகடன் இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு. வெளிவந்த காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை. குறிப்பாக கால இயந்திரத்தில் பெரியாரை அழைத்துவந்து சமகாலச் சூழலில் நிகழ்த்தும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ‘ஜீன்ஸ் பெரியார்’ கதை, மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன் உரையாடல்களையும் தொடக்கிவைத்தது. புத்தர், பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், காந்தி போன்ற வரலாற்று மனிதர்களில் இருந்து …
பாதி இரவு கடந்துவிட்டது
அமிதபா பக்சி
தமிழில்: இல. சுபத்ரா
இந்திய மரபின் தேர்ந்த கதைசொல்லி அமிதபா பக்சி. நவீனத்தின் சிக்கல்களைக் கையாள்வதில் பரந்த பார்வையும் கொண்டவர். புறத்தை விவரிப்பது போலக் காட்டி அகத்திற்குள் ஆழ்ந்து செல்வது இவரது எழுத்தின் இயல்பு. நழுவி இழுத்துச் செல்லும் மொழி வாசிக்கச் சுகமாக இருக்கிறது. சுழலில் தவிக்கும் தமிழ் எழுத்துப் பரப்பில் இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வாக்குறுதி – நவீன சீனாவில் காதலும் இழப்பும்
சின்ரன்
தமிழில்: சசிகலா பாபு
“ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.”
Titles
Best Sellers
-
நோய்களிலிருந்து விடுதலை
₹ 70.00 -
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
₹ 60.00 -
உங்களுக்குள் ஒரு மருத்துவர் ₹ 60.00
-
தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் ₹ 50.00
-
உடலின் மொழி ₹ 80.00
Cute Slider
